நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியிருந்த விவாதத்தை மூன்றாவது நாளாகவும் நடாத்த நேற்று நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தது.அதன்படி , ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், இன்றைய தினமும் இந்த விவாதத்தை நடத்த ஒருமனதாக தீர்மானித்தனர்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை , நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றிற்கும் மற்றும் விசாரணைக்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ , பிரதமரிடம் கோரியிருந்தார்.நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவித்த போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.அதற்கு பதிலளித்த பிரதமர் , அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தயார் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment