Tuesday, May 21, 2019

25ஆம் திகதியின்பின்னர் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பொதுபல சேனா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலையில் உள்ள ஞானசார தேரரரை பார்க்கச்சென்றமை அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் முன்னேற்றமாக அமைந்துள்ளதாக பொதுபால சேனா தெரிவித்துள்ளது.
 
பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதை தெரிவித்துள்ளார்.
 
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில்
அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடி இருந்தார்.ஞானசார தேரரை விடுதலை செய்வது குறித்து ஒரு வார்த்தையும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், இம்மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் நாடு முழுவதும் இதற்கான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக் கூட்டங்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment