பயங்கரவாத புலிகளினால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்
பயங்கரவாத புலிகளி ன்
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் 28 வது ஆண்டு நினைவு நாளான இன்று (21.05.2019) டில்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
ராஜிவ் தமிழகத்தின் வருகையின் போது ஸ்ரீ பெரும்புதூரில் கடந்த 1991 ம் ஆண்டில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இந்த மரணம் காங்., மற்றும் நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொடூரமாக கொல்லப்பட்ட இந்நாளை பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
28 வது நினைவுநாளான இன்று டில்லியில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா , மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர் வாத்ரா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நாடு முழுவதும் காங்., தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக காங்., அலுவலகத்தில் காங்., தலைவர் அழகிரி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அன்பை போதித்தவர்
ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை மிக சிறந்த மனிதர் , அன்பானவர், இரக்கமானவர், பாசமானவர், எனக்கு, எனது தந்தை அனைவர் மீதும் அன்பு செலுத்த கற்று கொடுத்துள்ளார். யார் மீதும் வெறுப்பு கூடாது. மன்னிக்கும் தன்மை வேண்டும் என்பார். எனது தந்தையை இழந்து விட்டேன். அவரது மறைவுநாளில் அன்புடனும், நன்றியுடனும் நினைவுகூர்கிறேன்
No comments:
Post a Comment