நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்கநேரிடும் என்றும் இதனால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவர்கள் தேச துரோகிகளாகவே மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ” நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிப்பெற்றாலும் , தோல்வியடைந்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதாவது பிரேரணை
வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்கநேரிடும். இதனால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்.
இதேவேளை பிரேரணை தோல்வியடைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களும் மக்களால் தேசதுரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள். இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உறுப்பினர்கள் என்று கருதும் அளவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
எதிர்தரப்பினர் விடயத்தில் மாத்திரமே பாதுகாப்பு துறையினர் முறையாக செயற்படுகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான பியல் நிஷாந்த சில்வா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இதுவரையில் நீதித்துறைக்கு அவப்பெயரினை ஏற்படுத்திய மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment