Tuesday, May 7, 2019

ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதலில் 44 வெளிநாட்டவர்கள் பலியாகி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டுத்தாக்

இந்திய பிரஜைகள் 11 பேர் இந்த தாக்குதல்களில் உயிரிழந்ததுடன், சீனாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் சவுதி அரேபியா, பங்களாதேஸ், டென்மார்க், ஜப்பான், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரஜைகளும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 31 வெளிநாட்டாவர்களின் சடலங்கள் இதுவரையில் அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இன்னும் 10 வெளிநாட்டாவர்கள் இந்த சம்பவத்தின் பின்னர் காணாமல் போய் இருப்பதாகவும் அவர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் அடையாளம் காணப்படாதவர்களில் அவர்களும் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குதலில் 44 வெளிநாட்டவர்கள் பலியாகி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment