பயங்கரவாத தாக்குதலினால் பின்னடைவுக்கு உள்ளாகிய நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சில முன்மொழிவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் வர்த்தக சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே நிதி அமைச்சின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தக சபை உறுப்பினர்களும் துறைசார் வர்த்தகர்களும், நாட்டின் பாதுகாப்புத் துறையினர் மீது பூரண நம்பிக்கை வைத்து தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பரந்தளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எமது பாதுகாப்புத் துறையினரால் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவை உரிய முறையில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்படாமையின் காரணமாகவே சுற்றுலாத்துறை உள்ளிட்ட வர்த்தகத் துறையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வர்த்தக பிரதிநிதிகள் இந்நிலையிலிருந்து மீண்டும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் அரசாங்கத்தின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் சகல மக்களுக்கும் அறிவுறுத்துவதற்கான சிறந்த பொறிமுறையொன்று அவசியமெனவும் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு தரப்பினரால் வேறுபட்ட பிரகடனங்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாக நாட்டில் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குரோத மனப்பான்மையுடன் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வதை தவிர்த்து அனைவருக்கும் பொதுவான நடவடிக்கைகள் சமூகமயப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது,
புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுலா பிரயாணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதைத் தவிர்ப்பதற்காக ஹோட்டல்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்போது பாதுகாப்புத் துறையினரை கடமையில் ஈடுபடுத்துதல் மற்றும் ஸ்கேனர் பரிசோதனைகள் என்பவற்றிற்கு பதிலாக புலனாய்வு துறையை பலப்படுத்துவதன் ஊடாக சுற்றுலாத்துறையில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு இத்துறை சார்ந்த தமது ஏனைய பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த வர்த்தக துறையினர் அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சகல பிரிவினரும் எமது பாதுகாப்பு படையினர் மீது பூரண நம்பிக்கை கொள்ள முடியுமெனத் தெரிவித்தார்.
பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வர்த்தகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இயல்வு நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் தற்போது காணப்படுவதோடு, அன்றாட நடவடிக்கைகள் தடைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த பயங்கரவாத சவால்களை வெகுவிரைவில் நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து சகல செயற்பாடுகளையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்பதே தனது தேவையாகுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வதாக குறிப்பிட்டார். நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் சுற்றுலா துறையை விரைவில் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சபையின் தலைவர் ராஜேந்திரா தியாகராஜா, உப தலைவர் விஷ் கோவிந்தசாமி, பணிப்பாளர் நாயகம் தாரா விஜேதிலக்க உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் துறைசார் வர்த்தக சமூகத்தினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment