ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் உயிரிழந்தோ அல்லது கைது செய்யப்பட்டோ இருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் உயிரிழந்ததுடன், அவர்கள் அடையாளம் காணப்பட்டு விபரங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை நடத்திய குழுவில் குண்டு தயாரிப்பு தொடர்பான பரீட்சியம் பெற்ற இரண்டு பேர் இருந்ததுடன், அவர்களும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்பு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பாடசாலைகளில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனினும் இதனால் பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கருத முடியாது என்றும் பதில் காவற்துறை மா அதிபர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment