Sunday, April 28, 2019

சாய்ந்தமருது சம்பவத்துக்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்!

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு.
அத்துடன், சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள் என குறிப்பிட்டு ISIS ஆல் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
 
அம்பாறை மாவட்டம், கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.
தமது உறுப்பினர்களின் தாக்குதலில் இலங்கைப் பொலிஸார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.
...
சாய்ந்தமருது தற்கொலைதாரி றிழ்வான் துப்பாக்கியுடன், உயிர்த்த ஞாயிறு தினமன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரான் ஹாசீமும் நிக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment