பாதுகாப்பு தரப்பினரால் கல்முனையில் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது தமது 3 செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டமையை ஐ.எஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.எஸ். பிரசார பிரிவான அல் அமாக் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது..
அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர்.
பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற ஆயுத மோதலானது தமது செயற்பாடு என ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட காணொளியில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் சடலத்தை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.
அவர் இலங்கையின் ஐ.எஸ்ஸை பின்பற்றுபவர்களின் தலைவரான சஹரான் ஹாசீமுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை அல் அமாக் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment