Sunday, April 28, 2019

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளலாம்! சிக்கியது தொடர்பாடல் கருவி!

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், கத்திகள் இரண்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ- கல்லெலிய பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும்.
அங்கு கிடைத்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெயங்கொட பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில்வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரும் இளைஞரொருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே நிட்டம்புவையில் இச்சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்களுள் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகித்ததாகக் கூறப்படும் நபரின் மனைவியும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment