Tuesday, April 23, 2019

அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை விளையாட்டாகக் கொள்ளக் கூடாது-மஹிந்த ராஜபக்ஸ!

ஜனாதிபதி ஒரு பக்கத்திலும் பிரதமர் இன்னுமொரு பக்கத்திலும் இருந்து செயற்படும் இந்த அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புப் பிரச்சியைனைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
 
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் எதிர்க் கட்சித் தலைவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.
 
நாட்டின் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை விளையாட்டாகக் கொள்ளக் கூடாது. கடந்த அரசாங்க காலத்தில் நாட்டிலுள்ள யுத்தத்துக்கு முகம்கொடுக்க பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் கூடி ஆராய்ந்ததன் பின்னர், அது பாதுகாப்பு உயர் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இது எமது நாட்டு மக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினை ப
யங்கரவாதப் பிரச்சினை. இபோன்ற சம்பவமொன்று இதன்பின்னர் இடம்பெறக் கூடாது எனப் பிரார்த்திக்கின்றேன்.
 
பயங்கரவாதத்துக்கு இனம், மதம் என்பது தெரியாது. இதனால், இந்த பயங்கரவாதப் பிரச்சினைக்காக  ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ விரல் நீட்ட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறினார். 

No comments:

Post a Comment