இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவங்களை ஐ.ஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அமாக் எனப்படும் செய்தி முகவர் சேவையொன்று இதனை வெளிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எனினும் மேலதிக விபரங்கள் எதுவும் குறித்த செய்தி சேவையில் வெளியிடப்படவில்லை.
கிறிஸ்த்தவ தோவாலயங்கள் மற்றும் நட்சத்திர விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 321 பேர் பலியாகியுள்ளதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்து தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment