கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் நேற்றிரவு உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் மாத்திரம் 151 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 109 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 5 உடற்பாகங்களும் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 500 ஐ விடவும் அதிகரித்துள்ளதாகவும் தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் மரணித்த ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் அவர்களது இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்காக தலா ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இதேநேரம், காயமடைந்தவர்களுக்கு 1 முதல் 3 லட்சம் ரூபா வரையில் இழப்பீட்டை வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடததக்கது.துள்ளார்.
No comments:
Post a Comment