நேற்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 4 தாக்குதல்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அரச இரசாயன பரிசோதகர் ஆரியானந்த வெலிங்க சகோதர மொழி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், கட்டான கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மற்றும் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டல் ஆகியவற்றில் இடம்பெற்ற தாக்குதல்கள், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் நடைபெற்ற கள விசாரணைகளில், அங்குக் காணப்பட்ட உடற் பாகங்களைப் பரிசோதனை செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஏனைய வெடிப்புச் சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்களாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் மேசேந்தலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment