Monday, April 22, 2019

பலி எண்ணிக்கை சுமார் 290 ஆக உயர்வு! - கைதான 24 பேரிடமும் CID விசாரணை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  452 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
 
சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் CID விசாரணை!
 
நாடளாவிய ரீதியாக நேற்று(21) கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment