Monday, February 27, 2017

6 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‛லா லா லேண்ட்', ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ‛லா லா லேண்ட்' படம் 6 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேல் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
 
சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 89வது ஆஸ்கர் விருதுகள், அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‛டால்பி' திரையரங்கில் நடந்தது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. ஏராளமான திரைப்பிரபலங்கள் டால்பி திரையரங்கில் குவிந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.


6 விருதுகளை குவித்த லா லா லேண்ட்

 
89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‛லா லா லேண்ட்' திரைப்படம் 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகை, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு, இசை, பாடல் மற்றும் ஒளிப்பதிவு என 6 பிரிவுகளில் விருது வென்றது.

தேவ் பட்டேல் ஏமாற்றம் :
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேலுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. ‛லைன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், ‛மூன்லைட்' படத்தில் நடித்த மஹேர்சலா அலி, சிறந்த துணை நடிகர் விருதை வென்றார்.


ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் :

 
ஹாலிவுட்டின் அதிரடி மன்னனான ஜாக்கி சான் திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி, ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 
விருதுகள் விபரம்

 
சிறந்த துணை நடிகர் : மஹேர்சலா அலி (மூன் லைட்)சிறந்த ஒப்பனை : அலிசாண்ட்ரோ. ஜியார்ஜியா, கிறிஸ்டோபர் வில்சன் (சூசைட் ஸ்குவாட்)சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கொலின் அட்வுட் (பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைன்ட் தம்)சிறந்த ஆவணப்படம் : ஓ.ஜே. மேட் இன் அமெரிக்காசிறந்த சவுண்ட் எடிட்டிங் : அரைவல்சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கெவின் ஓ கனெல், ஆண்டி ரைட், ராபர்ட் மெக்கென்சி, பீட்டர் க்ரேஸ்(படம்- ஹாக்ஸா ரிட்ஜ்)சிறந்த துணை நடிகை : வயோலா டேவிஸ் (படம் - பென்சஸ்)கவுரவ ஆஸ்கார் விருது : ஜாக்சிசான் (1960 ம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வருவதற்காக)சிறந்த வெளிநாட்டு மொழி படம் : தி சேல்ஸ்மேன்
 
(ஈரான் நாட்டு படம்)சிறந்த அனிமேஷன் குறும்படம் : பைபர்சிறந்த அனிமேஷன் படம் : ஜூட்டோபியாசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : லா லா லேண்ட்சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : தி ஜங்கிள்புக்சிறந்த பட எடிட்டிங் : ஹாக்ஸா ரிட்ஜ்சிறந்த ஆவண குறும்படம் : தி ஒயிட் ஹெல்மெட்ஸ்சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் : சிங்சிறந்த ஒளிப்பதிவு : லினஸ் சான்ட்கிரின் (லா லா லேண்ட்) சிறந்த இசை : ஜஸ்டின் ஹர்விட்ஸ், (லா லா லேண்ட்) சிறந்த பாடல் : ‛சிட்டி ஆப் ஸ்டார்...' என்ற பாடல் (லா லா லேண்ட்)சிறந்த திரைக்கதை : ‛மான்செஸ்டர் பை தி சீ' - கென்னத் லோனர்கேன் சிறந்த திரைக்கதை தழுவல் : ‛மூன் லைட்' - பேரி ஜேக்கின்ஸ் மற்றும் டேரல் அல்வின் மெகர்னேசிறந்த இயக்குநர் : டேமியன் சால்ஸே (லா லா லேண்ட்)சிறந்த நடிகர் : கேஸி ஆப்லெக் (மான்செஸ்டர் பை தி சி)சிறந்த நடிகை : எமா ஸ்டோன் (லா லா லேண்ட்)
 
சிறந்த படம் : மூன் லைட்விருதில் குளறுபடி : சிறந்த திரைப்படத்திற்கான விருது முதலில் லா லா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தவறாக சொல்லப்பட்டுவிட்டது என்றும், சிறந்த படம் ‛மூன் லைட்' என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த குளறுபடியால் ஆஸ்கர் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Sunday, February 26, 2017

நெல்லியடி புலவரோடை பகுதியில், சக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக குண்டுகள் மீட்பு!

நெல்லியடி - புலவரோடை பகுதியில், சக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக குண்டுகள் இன்று மீட்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 புலவரோடை பகுதியில், தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்ப
ட்டது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டனர்.

இப்பகுதியில் கடந்த காலத்தில் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. இவ்வெடிபொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

Friday, February 24, 2017

சீனாவின் உயர் மட்டக் குழுவினர், மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு!

இலங்கைக்கு விஜயம் செவய்துள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் வைத்து மஹிந்தவை சந்தித்துள்ளனர்.
 
இந்தச் சந்திப்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, மகிந்தானந்த அழுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ஸ மற்றம் முன்னாள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
தமது ஆட்சிக் காலத்தின்போது சீனாவுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு வழங்குவதற்கும், முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.
 
இதேவேளை, சீன உயர்மட்ட குழுவினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, February 15, 2017

வடகொரிய அதிபரின் சகோதரர் படுகொலை!

கோலாலம்பூர்: வடகொரிய அதிபர், கிம் ஜாங் யுன்னின் சகோதரர், மலேஷியாவில், இரண்டு பெண் ஏஜென்டுகளால், விஷ ஊசி போட்டு, படுகொலை செய்யப்பட்டார்.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக, கிம் ஜாங் யுன் உள்ளார். அந்நாட்டின் சர்வாதிகாரியான இவர், அண்டை நாடுகளான, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அவ்வப்போது, எச்சரிக்கை விடுத்து, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கிம் ஜாங் யுன்னின் சகோதரர், கிம் ஜாங் நாம்; இவர், தென் கிழக்காசிய நாடான மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையம் சென்றபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக, இரண்டு பெண் ஏஜென்டுகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
 
  தாங்கள் வைத்திருந்த விஷ ஊசிகளை, கிம் ஜாங் மீது, மின்னல் வேகத்தில் செலுத்திய அந்த பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், டாக்சியில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த பெண்கள், வடகொரியாவை சேர்ந்த ஏஜென்டுகளாக இருப்பர் என சந்தேகிக்கப்படுகிறது. விஷம் ரத்தத்தில் பரவியதால், சில நிமிடங்களில், கிம் ஜாங் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கிம் ஜாங்கை கொல்ல, 2011லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அப்போது, அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Saturday, February 4, 2017

ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை?

வாஷிங்டன்: ஐ.நா., ஒப்பந்தத்தை மீறி ஈரான் நடத்திய ஏவுகணை சோதனைக்கு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பொருட்களை விநியோகித்த 24 க்கும் மேற்பட்ட ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர், டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மைக்கேல் பிளைனன் சில நாட்களுக்கு முன் கூறியதாவது:
மேற்காசிய பகுதியில், ஈரான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. சவுதி நாட்டு போர் கப்பல் மீது, ஈரான் அரசின் ஆதரவுடன், ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரான், ஏவுகணை சோதனை நடத்த, ஐ.நா., அமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது; ஆனால், இந்த தடையை மீறி, சமீபத்தில், நவீன ரக ஏவுகணை

இது, அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஐ.நா., விதிமுறையை மீறி செயலாகவும் கருதப்படுகிறது. எனவே, அந்த நாட்டிற்கு, அமெரிக்கா சார்பில், அதிகாரபூர்வமாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்நிலை தொடர்ந்தால், ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஈரான் அரசு எச்சரிக்கை நோட்டீசை பொருட்படுத்தவில்லை என கூறி ஏவுகணை சோதனைக்கு தொழில்நுட்பம், ஆயுத பொருட்களை விநியோகம் செய்த 24 க்கும் மேற்பட்ட ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
யை சோதனை செய்துள்ளது.