Wednesday, February 15, 2017

வடகொரிய அதிபரின் சகோதரர் படுகொலை!

கோலாலம்பூர்: வடகொரிய அதிபர், கிம் ஜாங் யுன்னின் சகோதரர், மலேஷியாவில், இரண்டு பெண் ஏஜென்டுகளால், விஷ ஊசி போட்டு, படுகொலை செய்யப்பட்டார்.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக, கிம் ஜாங் யுன் உள்ளார். அந்நாட்டின் சர்வாதிகாரியான இவர், அண்டை நாடுகளான, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அவ்வப்போது, எச்சரிக்கை விடுத்து, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கிம் ஜாங் யுன்னின் சகோதரர், கிம் ஜாங் நாம்; இவர், தென் கிழக்காசிய நாடான மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையம் சென்றபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக, இரண்டு பெண் ஏஜென்டுகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
 
  தாங்கள் வைத்திருந்த விஷ ஊசிகளை, கிம் ஜாங் மீது, மின்னல் வேகத்தில் செலுத்திய அந்த பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், டாக்சியில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த பெண்கள், வடகொரியாவை சேர்ந்த ஏஜென்டுகளாக இருப்பர் என சந்தேகிக்கப்படுகிறது. விஷம் ரத்தத்தில் பரவியதால், சில நிமிடங்களில், கிம் ஜாங் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கிம் ஜாங்கை கொல்ல, 2011லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அப்போது, அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


No comments:

Post a Comment