ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் மாணவர்கள் துவக்கி வைத்த அறவழி எழுச்சி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறை போராட்டமாக முடிந்தது. சில தீய சக்திகளின் ஊடுவலால் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்...
சென்னையில்
நிகழ்ந்த வன்முறை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு
விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்
கலாச்சாரத்தின் மீதான ஊடுருவலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உண்மையை
யாராலும் மறைக்க முடியாது. இளைஞர்கள் மீது கட்சி சாயம் பூசப்படுகிறது.
ஜல்லிக்கட்டை பொறுத்தமட்டில் தமிழகத்தில் காளைகள் செல்லப்பிராணிகளாக
வளர்க்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டை தடை செய்ய கூடாது :
போராட்டத்தில்
பங்கேற்றவர்கள் பல வழிகளில் பல கோணங்களில் பேசுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கான கோரிக்கை 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. ஜல்லிக்கட்டு தடை
சரி என்றால், மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வது எப்படி சரியாக இருக்கும்.
ஜல்லிக்கட்டை தடை செய்ய கூடாது, அதை நடத்த ஒழுங்குப்படுத்த வேண்டும்.
அடக்குமுறைகள் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது.
அரசியலுக்கு வர மாட்டேன் :
தமிழர்களின்
பிரச்னை எனது பிரச்னை, இந்தியாவின் பிரச்னை எனது பிரச்னை, உலகத்தின்
பிரச்னை எனது பிரச்னை. தெரியாத அரசியல் வேலைக்கு வர மாட்டேன், தெரிந்த வேலை
நிறைய இருக்கிறது. நியாயமான போராட்டத்திற்கு மாணவர்கள் கண்டிப்பாக
வருவார்கள். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது ஒட்டுமொத்த உலகத்தின்
பொறுப்பு. எதையும் தடை செய்யாதீர்கள் ஒழுங்குப்படுத்துங்கள். இவ்வாறு
கமல்ஹாசன் கூறினார்.
No comments:
Post a Comment