சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலருக்குத் தெரிந்தே நடந்தது என்றும், முன்னாள் பாதுகாப்புச் செயலரே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, லசந்த விக்கிரமைதுங்கவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணை நடத்தினால், கொலையாளியின் அடையாளங்களை வெளிப்படுத்துவேன். சில தரப்பினர் விளைவுகள் அல்லது தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல், இலகுவாக கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment