முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு ஆதரவான மலேசியர்கள் புத்ரா உலக வணிப மையத்திற்கு முன்புறம் போராட்டத்தில் இறங்கினர். ராஜபக்சே மலேசியாவில் இருக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கூறினர்.
ஆசியான் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய அளவில் புலிகளுக்கு ஆதரவான மலேசிய மக்கள் போலீஸ் புகார் அளித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். கடந்த வியாழன்கிழமையும் நேற்றும் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தின் முன் கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளைச் சேர்ந்த மலேசியத் தமிழர்கள் இன்றும் ஒன்று கூடி தனது அதிருப்தியினைத் தெரிவித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று ஒன்று திரண்ட வேளை, "ராஜபக்சே மாநாட்டிலோ அல்லது நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கோஷமிட்டனர்.
மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த வேளை, போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர்.
நேற்று ஏற்பாட்டுக்குழு சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், மாநாட்டு மண்டபத்தில் ராஜபக்சே இல்லை என்று கூறிய ஒரு மணிநேரத்திற்குள் மாநாட்டு மேடையில் ராஜபக்சே உரையாற்றிய புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment