எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்
போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதனால் அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.