முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பலத்தினால் நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அஞ்சியே ஆட்சியில் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை சந்திப்பதற்காக இன்று திங்கட்கிழமை(20) ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விஜயம் செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,
இந்த அரசியல் சூழ்ச்சி தொடர்பாக நாங்கள் வியப்படைகின்றோம். அரசாங்கம் ஏன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பின்னால் முழுநேரம் கண்ணோட்டம் செலுத்தி அரசியல் சூழ்ச்சி செய்கின்றது?ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்விஷன் பலத்திற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது இதுமூலம் தெளிவாகின்றது.
இந்த நடவடிக்கையின் ஊடாக 24 மணிநேரமும் அரசாங்கம் பயத்துடனே இருக்கின்றது என்பது புலப்படுகின்றது.
அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு சென்றாலும், நாட்டின் அரசியல் மாற்றம் பெறாது. அடக்குமுறையும், அதனை மேற்கொள்பவர்களும் இறுதியில் அதனை அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்வதே காலத்தின் அடிப்படை என்றார்.