Monday, June 20, 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு விளக்கமறியல்!

இன்று(20) காலை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த அரசாங்க காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment