Sunday, September 20, 2015
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு கடந்த 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனெய், வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுமூகமான உறவுகளை கொண்டிருப்பதையே இந்தியா விரும்புவதாகவும், அதேநேரத்தில் அந்நாடுகளின் எல்லை மற்றும் கடல் எல்லை பிரச்சனைகளில் இந்தியா தலையிடாது என துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு 4 நாட்கள் அரசு முறை சுற்றுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று இரவு மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகையில் செய்தியாளர்களுக்கு தெரிவித்தவை பின்வருமாறு:-
தென்கிழக்கு ஆசியா குறித்து மிகத்தெளிவான பார்வையை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு சுமூகமான உறவை பேணவே இந்தியா விரும்புகிறது. இப்போது, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தேவையானது அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவையே. அமைதி இல்லையென்றால் நிலைத்தன்மை இருக்காது. வியாபாரம் இருக்காது. முதலீடு இருக்காது. வர்த்தகம் நடைபெறாது. பல தென்கிழக்கு ஆசிய நாடுகள் எல்லை மற்றும் கடல் எல்லை பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளை அவர்களுக்குள்ளாகவே தீர்த்து கொள்ளலாம். இதில் இந்தியா தலையிடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment