Saturday, September 19, 2015

கலப்பு நீதி­மன்ற விசா­ரணை உள்­ளக விசா­ர­ணை­யென்­பது உண்­மை­யல்ல. இது சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் கிளையே: விமல்­ வீ­ர­வன்ச!

Saturday, September 19, 2015
கலப்பு நீதி­மன்ற விசா­ரணை உள்­ளக விசா­ர­ணை­யென்­பது உண்­மை­யல்ல. இது சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் கிளையே என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வர் விமல்­ வீ­ர­வன்ச தெரிவித்துள்ளார். பத்­த­ர­முல்­லையில் இடம்­பெற்ற தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே விமல் வீர­வன்ச இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் உள்­ளக விசா­ரணை என்ற முத்­திரை குத்­தப்­பட்ட சர்­வ­தேச விசா­ர­ணைக்கே ஐ.நா.பரிந்­துரை செய்­துள்­ளது. கலப்பு நீதி­மன்­ற­மல்ல சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் கிளையை இங்கு நிறுவி எமது படை­யி­ன­ருக்கும் யுத்­தத்தை முடித்த தலை­வர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­ டிக்­கைகள் எடுக்­கவே முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. இரண்டு தரப்­பினர் எனக்­கூறி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்ள இந்த அறிக் ­கையில் விடு­தலைப் புலி­களின் குற்­றச்­செ­ய­ல்கள், கடு­மை ­யான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எது­வுமே குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.
 
ஆனால், எமது படை­யினர் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே, இது இரண்டு தரப்­பி­ன­ரது குற்றச் சாட்­டுக்­களை முன்­வைத்த அறிக்­கை­யல்ல, எமது படை­யி­னரை இலக்கு வைத்தே அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.கலப்பு நீதி­மன்­றத்தில் பெய­ருக்­காக எமது நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் இணை க்­கப்­பட்­டாலும் வெள்­ளைக்­கார நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் மற்றும் வெளி­நாட்டு தேவை­க­ளு க்­கான விதத்­தி­லேயே விசா­ர­ணைகள் நடை­பெறும்.
 
இந்­நீ­தி­மன்­றத்­திற்­கான நிதி­யு­த­வி­யையும் ஐ.நா.வே வழங்­கு­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணை­யி­லி­ருந்து நாடு பாதுகாக்கப்பட்டது என பிரதமரும் அரசும் தெரிவித்தாலும் உண்மையில் இதன் மூலம் சர்வதேச தலையீட்டுக்கு நாடு தள்ளிவிடப்பட்டுள்ளது என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment