Sunday, September 20, 2015
இறுதிகட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை நடத்த உள்ள விசாரணைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
போர்க்குற்ற விசாரணை குறித்த அமெரிக்காவின் தீர்மானம்
இன்று வெளியாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைக்கும்
அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தீர்மானத்தில்,
சர்வதேச புலனாய்வாளர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள்
இடம்பெற வேண்டும். நம்பகத்தன்மையுடைய நடுநிலையாளர்களைக் கொண்டு விசாரணை
நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி விசாரணைக்கு நம்பத்தன்மையுள்ள, நடுநிலையான நபர்களை இடம்பெறுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் அதிகார்ப்பூர்வ வடிவம் திங்கட்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment