Monday, September 21, 2015
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீவிரவாதிகள் ஏறியதாக
வந்த ரகசிய தகவலையடுத்து நேற்று காலை அப்பகுதியில் உள்ள மக்களை
வெளியேற்றிவிட்டு கோபுரத்தை மூட போலிசார் உத்தரவிட்ட நிலையில், தற்போது
மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக ஈபிள் கோபுரம் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள போலிசாருக்கு நேற்று காலை 5.30 மணியளவில் 3 தீவிரவாதிகள் கோபுரத்தின் மீது ஏறியதாகவும், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மர்மமான கைப்பையுடன் ஈபிள் கோபுரம் உள்ள பகுதியில் வலம் வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உடனடியாக அங்கிருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர்.மேலும், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் நுழைவுச்சீட்டு வழங்கும் அறைகளையும் போலீசார் மூடினர். காலை 9 மணியளவில் ஈபிள் கோபுரத்தை மூடிய போலீசார், ஈபிள் கோபுரத்தை சுற்றி ஹெலிகொப்டரில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்குரிய நபரை தேடி வந்தனர்.
மாலை வரை மர்ம நபர்கள் குறித்து தகவல் எதுவும் தெரியாத நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அல்-கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களால் ஈபிள் கோபுரத்திற்கு அடிக்கடி தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment