Monday, September 21, 2015

இந்திய மீனவர்கள் பேச்சு வார்த்தை அழைப்பை இலங்கை மீனவர்கள் நிராகரித்தனர்!

Monday, September 21, 2015
ஆழ் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது தமிழக மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.குறிப்பாக இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கடப்படுகிறார்கள்.  அவர்களது மீன் பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்கிறது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வரும் உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்த நிலையில் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்த வாருங்கள் என்று இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.  இந்த அழைப்பை இலங்கை மீனவர்கள் சமூகத்தினர் ஏற்க வில்லை.இது குறித்து வவுனியாவில் உள்ளஇலங்கை மீனவ சமூகத்தின் நிர்வாகி வினாயக மூர்த்தி சச்சாதேவன் கூறியதாவது,
இரு நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்  அந்த நாடுகளின் பிரதமர்களே தீர்வு காண முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் மீனவர்கள் சமூக பிரதி நிதிகள் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்.மீனவர்கள் இடையே நடக்கும் பேச்சு வார்த்தை அர்த்த முள்ளதாக இருக்க வேண்டும். இந்த பேச்சு வார்த்தையில் இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகளும் இடம் பெற வேண்டும். இரு மீனவ சமூகத்தினரும் இணைந்து எந்த ஒரு பிரச்சினைக்கும்  தீர்வு காண முடியாது.
 
மீன் பிடிப்பதில் இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருக்கிறது. இந் த பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் உள்ளூர் மீனவ சங்கங்களிடம் தலைவர்கள் தெரிவிப்பது இல்லை.  இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் எல்லையை கடந்து சட்டவிரோதமாக மீன் பிடிப்பதாக இலங்கை குற்றம் சாட்டுகிறது.இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது.இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வருகிறார்கள் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது.
 
ஆனால் ,இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைப்பகுதியிலேதான் மீன் பிடிப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக கச்ச தீவை சுற்றிலும்தான் மீன் பிடிக்கிறார்கள். தாங்கள் அதனை தாண்டி மீன் பிடிக்கச் செல்வது இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த கச்ச தீவு பகுதியை கடந்த 1974ம்ஆண்டு இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்து கொடுத்தது.அந்த தீவுப்பகுதியை மீண்டும் இந்தியா பெற வேண்டும் என தமிழக தலைவர்கள் கோரிக் கை விடுத்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment