Sunday, September 20, 2015

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை!

Sunday, September 20, 2015
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடலுணவு இறக்குமதி தடையை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சின் பணிப்பாளர் கிறிஸ்டி லால் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளர்ர்.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்த 36 நிபந்தனைகளில் 35 நிபந்தனைகள் இதுவரையில் அமுலாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிபந்தனைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்திருந்தது.

இதற்கு முன்னர் இந்த நிபந்தனைகள் அனைத்தும் அமுலாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment