Sunday, September 20, 2015

கலப்பு நீதிமன்றத்தைத் ஆதரவு அளிக்கப்போவதில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ !

Sunday, September 20, 2015
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரிக்க அமைக்கப்படவுள்ள கலப்பு நீதிமன்றத்தைத் தாம் நிராகரிக்கிறார் என்றும் அதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
 
 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கை அண்மையில் வெளியானது. இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பின்னரே கருத்து வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் உள்நாட்டில் திறமையான நீதிபதிகள் உள்ளனர். எனவே வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அவசியமில்லை. உள்நாட்டு நீதிபதிகள் மட்டும் அங்கம் பெறும் விசாரணைகளுக்கு மாத்திரமே நான் ஆதரவு வழங்குவேன். கலப்பு நீதிமன்றத்துக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். -

No comments:

Post a Comment