Sunday, September 20, 2015

மனித உரிமையை காக்க இலங்கை அரசு பாடுபடுகிறது: அமெரிக்கா புகழாரம்!

Sunday, September 20, 2015
வாஷிங்டன்,:''இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வலுவான நோக்கம் உள்ளது'' என தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியதாவது:
 
கடந்த ஒன்பது ஆண்டுகளாகவும் அதற்கு முன்பாகவும் இலங்கையில் ஆண்ட அரசுகளை விட புதிய அரசு பொறுப்பேற்ற ஒன்பது மாதங்களில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க சிறப்பான முயற்சி மேற்கொண்டு வருகிறது.முந்தைய ஆட்சி காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.அதனால் தான் இலங்கை இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக்கு சென்ற ஆண்டு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.இந்தாண்டு இலங்கையில் அமைந்த புதிய அரசு அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் ஊழல் ஒழிப்பு நீதித்துறை சீர்திருத்தம் உள்ளிட்டவற்றிலும் வெளிப்படையான அணுகுமுறையை கையாள்கிறது; இது வரவேற்கத்தக்கது.
இருந்தபோதிலும் இலங்கை அரசு அதன் பொறுப்புள்ள செயல்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கும் என அமெரிக்கா நம்புகிறது.இதற்கு ஓரளவு சர்வதேச சமுதாயத்தின் பங்களிப்பும் அவசியம். அது எத்தகையது என்பதை விவாதித்து கூடிய விரைவில் முடிவு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது மிகக் கடினமான நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.
அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு தேவை. இலங்கை மக்கள் அமைதியாக வளமுடன் வாழ அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை இறுதிப்போரில் மனித உரிமை மீறல் குறித்து நம்பகத்தன்மை உடைய உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்; இதில் நீதி மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்
படுத்த சர்வதேச சமூகத்தின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்க வேண்டும்''அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment