Thursday, September 17, 2015
எதிர்வரும் ஜனவரிமாதம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைப் பொறிமுறைமை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமைக்கு போதியளவு சர்வதேச ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த விசாரணைகள் பூர்;த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment