Thursday, September 17, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால்
வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக
பதிலளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும்
பரிந்துரைகளை கவனத்திற் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரவேற்றுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் புதிய அரசாங்கம் பேணி வரும் ஆக்கபூர்வமான உறவுகளை புரிந்து கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளி;ட்ட அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையானது குற்றவியல் விசாரணையாக நடத்தப்படவில்லை எனவும், பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் மனித உரிமைப்பேரவையின் முறைமைகளுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையுடன் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை அரசாங்கத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 15ம் திகதியிடப்பட்டு இந்த பதிலறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment