Friday, September 18, 2015

கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க., சதி: பழநியில் விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Friday, September 18, 2015
பழநி: நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க.,வினர் சதிசெய்வதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
 
பழநியில் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது.மாநில மகளிரணி தலைவிபிரேமலதா பேசியதாவது: பழநிகோயிலில் தரமற்ற தங்கும்விடுதிகள், நகரில் குடிநீர் திட்டம், ஆயக்குடியில் பழங்களை பதப்படுத்த குளிர்சாதனகிடங்கு வசதி, பச்சையாறு அணை உட்பட எந்த திட்டமும் நிறைவேறவில்லை. அணைகள், குளங்கள் துார்வாரப்படவில்லை. தமிழக காய்கறிகளை கேரளா தடைசெய்கிறது. அதேசமயம் அவர்களது மருத்துவகழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுகின்றனர். அதை ஏன் ஜெ., தடைசெய்யவில்லை என்றார்.
 
தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
 
ஆந்திராவில் கோதாவரி-கிருஷ்ண நதிகளை சந்திரபாபு இணைத்துள்ளார். தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை. டாஸ்மாக் பாதுகாவலராக போலீசார் மாறிவிட்டதால் போக்குவரத்துநெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர். தே.மு.தி.க.,ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க., சதி செய்கிறது.
 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ஜெ.,விற்கு 'கட் அவுட்' வைத்தனர். அவர் 2016ல் கெட்- அவுட் ஆகபோகிறார், எனபேசும்போது, கூட்டத்தில் தொண்டர் ஒருவர் உடலில் தீவைத்துகொண்டார். இதனால் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டதால் எதிர்கட்சிகள் சதிசெய்கின்றனர். சிவகங்கை கூட்டத்தில் தெளிவாக விளக்குகிறேன் பேச்சை பாதியில் முடித்தார். பரிசல், குதிரைவண்டி உள்ளிட்டவைகளை சிலருக்கு கொடுத்துவிட்டு புறப்பட்டுசென்றார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் கிழக்கு ரவிக்குமார், எஸ்.ஆர்.கே.,பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
 
தீக்குளித்த தொண்டர்:
 
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த குமரேசன் மகன் கஜேந்திரபிரபு,23. இவர் விஜயகாந்த் மேடையில் பேசும்போது திடீரென உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கட்சியில் தன்னை சேர்த்து பொறுப்பு வழங்க மறுத்த காரணத்தால் தீ குளித்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிக்குமார் கூறுகையில்,“கஜேந்திரன் சில ஆண்டுகளுக்குமுன் ரசிகர் மன்றத்தில் பணிபுரிந்தார். அதன்பின் தி.மு.க.,விற்கு சென்றுவிட்டு மீண்டும் கட்சிக்குவந்தவர். 6 மாதத்திற்கு முன் அ.தி.மு.க.,விற்கு சென்றவர். மீண்டும் கட்சியில் சேர்க்க கூறினார். பரிசீலனை செய்வதாக கூறினோம். இதனால் விஜயகாந்தை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தார். தற்போது அவர் எதிர்கட்சியினர் துண்டுதலால் தீ குளித்தாரா என சந்தேகப்படுகிறோம்,”என்றார்.
 
தேமுதிக ஆட்சியை பிடிக்கும்:
ஊட்டியில் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
 
அரசு நடத்திய, உலக முதலீட்டாளர் மாநாட்டின் உண்மை நிலை, அடுத்த ஆறு மாதங்களில் தெரிந்து விடும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கிரானைட் முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில், தமிழகம், கர்நாடக அரசுகள் அரசியல் செய்கின்றன. இதனால், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் கூட்டணி குறித்து, இப்போதைக்கு பேச வேண்டியதில்லை.
 
2016ல், நிச்சயம் தே.மு.தி.க., ஆட்சியை பிடிக்கும். மாநில அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்களில் தரமில்லை என, புகார்கள் வருகின்றன. நான் அந்த இலவச பொருட்களை வாங்குவதே இல்லை; அப்படி இருக்கும் போது, அதன் தரம் குறித்து எனக்கு எப்படி தெரியும்?
 
ஊட்டி -- கோவைக்கு மூன்றாவது மாற்றுப் பாதை அமைக்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதியை, முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. ஊட்டி உட்பட மாநிலத்தின் பிற சுற்றுலா மையங்களை அரசு மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

No comments:

Post a Comment