Thursday, September 17, 2015

அமெரிக்கா பிரேரனை கொண்டு வரும்வரை இந்தியா ஐநா விசாரணை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்காது

Thursday, September 17, 2015
இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்த விபரங்கள்  தெரியவரும்வரை இந்தியா ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையை ஆராய்ந்து வருகின்றது அதனை விட முக்கியமாக புதுடில்லி அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்காகவே காத்திருக்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தனது தீர்மானத்தின் நகல்வடிவை எதிர்வரும் 24 ம்திகதி ஏனைய உறுப்பு நாடுகளிற்கு வழங்கவுள்ளது, அமெரிக்கா இலங்கை முன்னெடுக்கவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அமெரிக்கா நம்பிக்கை கொள்வதற்கான காரணங்கள் அதனிடம் உள்ளன என இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
 

No comments:

Post a Comment