Tuesday, September 22, 2015

இந்தியா - இலங்கை இடையேசாலை அமைக்க பேச்சு துவக்கம்!

Tuesday, September 22, 2015
புதுடில்லி:இந்தியா - இலங்கை இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் துவங்கவுள்ளது. மத்திய, சாலை போக்கு
வரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அண்டை நாடுகளுடன்
 
வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சாலை போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 
இலங்கையுடனும், சாலை போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இலங்கை யின் தலைமன்னாரில் இருந்து, இந்தியாவின் தனுஷ்கோடி வரை, கடலுக்கு மேல் பாலம் காட்டியும், கடலுக்குள் சுரங்கம் அமைத்தும், சாலை அமைக்கும் திட்டம் தயாராகியுள்ளது.இந்த சாலை திட்டம், 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சு, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே, அடுத்த மாத இறுதியில் துவங்கவுள்ளது.

No comments:

Post a Comment