Tuesday, September 22, 2015
இந்தியாவின் 26வது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்க இடமளியோம் என பாராளுமன்ற
உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற
ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 74,000 கோடி ரூபா செலவில் இலங்கை
- இந்தியா இடையே கடல்வழி பாலம் அமைப்பதன் மூலம் இந்திய பிரஜைகளுக்கு
குறைந்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சீபா உடன்படிக்கையை
செயற்படுத்தும் அங்கமாக இது அமைகிறது.
பாலம் கட்டிய பின் வரிசையாக வரும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டிவரும்.
இலங்கையர்களை வைத்து வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா கொடுக்க
வேண்டி வரும் என்பதால் இந்தியர்களை வைத்து நாளொன்றுக்கு 250 ரூபா கொடுத்து
வேலையை செயற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. மலையக மக்களைப் போன்று தமது
நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை இந்தியா வழமையாகக் கொண்டுள்ளது.
இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் ஏற்படுகிறது.
யுத்தக்குற்ற அறிக்கை மூலம் வெள்ளையர்களுக்கு இலங்கையில் வழக்கு வாதிட
இடமளிக்க முடியாது. காலனித்துவம் நிலவிய போதே அதனை செய்ய முடியும். ஆனால்
இலங்கை இன்று சுயாதீன அரசு என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
யுத்தக்குற்ற அறிக்கை மூலம் வெள்ளையர்களுக்கு இலங்கையில் வழக்கு வாதிட
இடமளிக்க முடியாது என்றும் காலனித்துவம் நிலவிய போதே அதனை செய்ய முடியும்
என்றும் ஆனால் இலங்கை இன்று சுயாதீன அரசு என்றும் உதய கம்மன்பில
தெரிவித்தார்...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டத்திற்கு 5.2 பில்லியன் அமெரிக்க டொலரை, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இந்தியா கடனாகக் கோரியுள்ளதாகவும், இதில் இலங்கை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது குறித்து கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு விடயத்தின் மூலமே இந்தியா தனது நோக்கத்திற்காக இவ்வாறு பாலம் அமைக்கின்றமை உறுதியாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலகுவில் இந்தியர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தப் பாலம் வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது புதிய விடயமல்ல என்ற போதிலும் இரு நாடுகளுக்கு சம நன்மைகள் ஏற்படக்கூடிய வகையில் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனப் பெருஞ்சுவரைப் போன்று, இந்து சமுத்திரம் இலங்கைக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது புதிய விடயமல்ல என்ற போதிலும் இரு நாடுகளுக்கு சம நன்மைகள் ஏற்படக்கூடிய வகையில் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment