Tuesday, September 22, 2015

மத்திய மாகாண அரசியல்வாதியின் மனைவியை அபகரித்த அசாத் சாலி. பொலிஸ் நிலையத்தில் புகார்!

Tuesday, September 22, 2015
மத்திய மாகாண அரசியல்வாதி ஒருவரின் மனைவியைக் கடத்தி வந்து தன்னுடன் வைத்திருப்பதாக அசாத் சாலி மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இன்னொரு அரசியல்வாதியின் மனைவியைக் கடத்தி வந்து தடுத்து வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீட்டில் குறித்த பெண்ணும், அசாத் சாலியும் தனியாக பதுங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த வீடு பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பெண்மணி அவரது சுய விருப்பின் பேரிலேயே தன்னுடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அந்தப் பெண்ணும் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு ஐம்பது வயது என்றும், திருமணமாகி நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2002ம் ஆண்டு கொழும்பு பிரதி நகரபிதாவாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த அசாத் அசாலி, ஹற்றன் நஷனல் வங்கியின் பெண் ஊழியராக இருந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை அவரது கணவரிடமிருந்து பிரித்து தனது செயலாளராக நியமித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அந்தப் பெண்ணுக்கு நாதியா என்று பெயர் மாற்றம் செய்து, திருமணம் முடித்திருந்த நிலையில் அசாத் சாலி தன்னை ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment