Tuesday, September 22, 2015

நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Tuesday, September 22, 2015
நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிரான்ஸ் வோல்டர் ஸ்டின்மியர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லாட்சி ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் பற்றி பேசப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவுகளை பல்வேறு வழிகளிலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் அமையப்பெற்றது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

11 ஆண்டுகளின் பின்னர் ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே மாதம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment