Tuesday, September 22, 2015
புதுடில்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான், சீனா ஆகிய
நாடுகளுடனான எல்லை பகுதிக்கு சென்று, மூன்று நாள் ஆய்வு நடத்தவுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:உள்துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, எல்லை
பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலில், ஜம்மு - காஷ்மீர்
மாநிலம் செல்லும் அமைச்சர், எல்லையில் உள்ள, இந்திய நிலைகளில் ஆய்வு
மேற்கொள்கிறார். பாக்., படையினரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும்
முகாம்களுக்கு செல்லும் ராஜ்நாத், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்துகிறார். இதன்பின், லடாக் பகுதிக்கு சென்று, சீன எல்லையில் உள்ள
இந்திய முகாம்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
No comments:
Post a Comment