Wednesday, September 02, 2015
ஐக்கிய தேசிய முன்னணி ( ஐக்கிய தேசிய கட்சி)யுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து ஏற்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பத்திற்கு நாளை வியாழக்கிழமை தீர்வு கிடைக்கவுள்ளது.
இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, அல்லது எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரில் ஒருவரே நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுவதுடன், பெரும்பாலும் சம்பந்தன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment