Friday, September 11, 2015
சீபா உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்திய காலனித்துவ நாடாக மாற்றவே ரணில் முயற்சிக்கின்றார். கடந்த தேர்தலில் இந்தியா செய்த உதவிக்கு ரணில் இப்போது மாற்றுதவி செய்கின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகில் எங்கும் இல்லாதவாறான ஒரு அரசாங்கம் இலங்கையில் இன்று நடைமுறையில் உள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சரவை மிகவும் மோசமானது எனவும் தான்தோன்றித்தனமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டவர்கள் இன்று நல்லாட்சியிலும் அதே முறைமையையே கையாள்கின்றனர். தமது அதிகாரங்களை தக்கவைக்கும் நோக்கத்தில் அமைச்சுப் பதவிகளை அதிகரித்து செல்கின்றனர். அதேபோல் கடந்த ஆட்சியில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட அனைவரும் இந்த ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளனர். ஆகவே மஹிந்தவை விரட்டியடிக்கும் ஒரே நோக்கத்தில் மட்டுமே இவர்கள் அனைவரும் செயற்பட்டுள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த மக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த மக்களும் விரும்பிய அரசாங்கம் அல்ல இப்போது அமைந்துள்ளது. இரண்டு தரப்பு மக்களையும் ஏமாற்றும் வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டுள்ளனர். ஆகவே அதற்கான விளைவுகளை மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். ஆகவே உண்மையான ஆட்சியை விரும்பும் மக்கள் எம்பக்கம் இணையவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது முக்கியமான சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக தலைமன்னார் மிஇராமேஸ்வரம் தரைவழி இணைப்பு தொடர்பிலும், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் உடன்படிக்கையும் அத்தோடு சீபா உடன்படிக்கையையும் கைச்சாத்திடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாட்டின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். எமது ஆட்சியில் இந்த உடன்படிக்கையை கைச்சாத்திட இந்தியா அழுத்தம் கொடுத்தது. எனினும் எமது நாட்டின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு நாம் அந்த உடன்படிக்கையை தவிர்த்துக்கொண்டோம். ஆனால் இப்போது மீண்டும் சீபா உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராகியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment