Saturday, September 12, 2015

வெளிவிவகார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இன்று ஜெனி­வா­விற்கு விஜயம்!

Saturday, September 12, 2015
வெளிவிவகார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இன்று ஜெனி­வா­விற்கு விஜயம் மேற்­கொள்­ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே தெரி­வித்தார். எதிர்­வரும் 14 ஆம் திகதி ஜெனி­வாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு கூட்­டத்தில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர விசேட உரை­யாற்­ற­வுள்ளார் என்றும் அவர் தெரி­வித்தார்.
 
வெளிவிவகார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் ஜெனிவா விஜயம் தொடர்­பாக அமைச்சின் பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே மேலும் தெரி­விக்­கையில், இன்று சனிக்­கி­ழமை ஜெனி­வா­விற்கு விஜயம் செய்யும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர 14 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஐ.நா. சபையில் உரை­யாற்­று­கிறார்.அதன் பின்னர் அன்­றைய தினமே புது­டில்லி திரும்பும் அமைச்சர் இந்­தி­யா­விற்கு விஜ­யத்தை மேற்­கொள்ளும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பய­ணத்­துடன் இணைந்து கொள்வார்.
 
அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுடன் நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவும் அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் மற்றும் மேல் மாகாண ஆளு­நரும் கலந்து கொள்­கின்றனர்.அத்­துடன் அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரென்று பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

No comments:

Post a Comment