Saturday, September 12, 2015

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினது போட்டோ பிரதியாகவே மைத்திரிபால - ரணில் விக்ரமசிங்க அரசாங்கம்: சோமவன்ச !

Saturday, September 12, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினது போட்டோ பிரதியாகவே மைத்திரிபால - ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் ஜனதா சேவக கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அதில் அவர், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அனைத்து தேசிய அரசாங்க விரோத அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளுடன் இணைந்துள்ள கட்சிகள் போன்றன குறித்து எவ்வித நம்பிக்கை
யும் கொள்ள முடியாது.
 
இந்த நாட்டு மக்கள் தெளிவான மாற்றம் ஒன்றையே கோரி நிற்கின்றார்கள்.
 
நாட்டை காட்டியெழுப்பும் தேசிய போராட்டம் ஆரம்பிக்கப்படும், மஹிந்த அரசாங்கத்திற்கும்  மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடு கிடையாது. தலைகள் மட்டுமே மாறியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment