Saturday, September 05, 2015
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க
அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இரகசியமாகவேனும் ஊழல் மோசடிகளில்
ஈடுபடக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி இந்தநாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை ஒன்றை அமைக்கக் கிடைத்தமை பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பதவி பிரமாணம் செய்து கொண்ட அனைவரையும் வாழ்த்துவதுடன் எனது ஆசீர்வாதங்களையும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை அரசியலில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்யிட்ட தமக்கு ஆதரவு வழங்கிய அனைத்துதரப்பினரதும் முயற்சியே இந்த புதிய அரசியல் கலாச்சாரமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100 நாள் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டம் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
100 நாள் திட்டத்தை நாம் வெற்றிகரமாகவே முன்னெடுத்திருந்தோம் என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், தற்காலிக அரசாங்கத்திலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியீட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சிக்கும் பிரதமர் ஊடாக ஏனைய கட்சிகளுக்கும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கும் போது கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஒரே கட்சிக்குக் கூட அமைச்சர்களை நியமிப்பதில் பெரும் சிரமங்களும் சாவல்களும் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியன வெற்றியீட்டிய போது அமை;சசரவையை நியமிப்பதில் சிரமங்கள் காணப்பட்டதாகவும் அதனை தாம் நேரடியாக அவதானித்து அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் ஆட்சிப் பொறுப்பினை வகித்த அரசியல் தலைமைகள் அமைச்சு நியமனங்களின் போது கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு வெற்றியீட்டிய போதிலும் நெருக்கடிகள் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வேறு கட்சிகள் ஒன்றாக இணைந்து அரசாங்கமொன்றை அமைக்கும் போது ஏற்படக் கூடிய சிக்கல்கள் நெருக்கடிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்கு 15 அமைச்சர், பிரதி ராஜாங்க அமைச்சர் 18 வழங்குவது எனவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 33 அமைச்சர் பதவிகளை வழங்குவதாக இணங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த 33 அமைச்சர் பதவிகளில், 26
அமைச்சுப் பதவிகள் மட்டுமே கட்சிக்கு கிடைக்கும் எனவும் ஏனையய அமைச்சுப்
பொறுப்புக்களை கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வகிப்பார்கள் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
“அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் நியமனத்தில் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதன் போது நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.
இதயத்தில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சிய மிகப்பெரிய செல்வம் எனவும், இதனை ஏற்படுத்திக் கொள்வது சிரமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி கிடைத்தவர்கள் தங்களுக்கான துறைகளை ஒப்பீடு செய்து திருப்தி அடைவார்கள் சிலர் கவலையடைவார்கள் எனவும், அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் கிடைக்கவில்லை என மனம் வருந்துவாhகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவது எளிதான காரியமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சவால் மிக்க காரியத்தில் இன்று வெற்றி கிட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் ஊடாக மட்டும் மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் ஏற்படாது எனவும் வேறும் வழிகளிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக்குழு, பிரதேச இணைப்புச் செயற்குழு, செயற்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் ஊடாக பல்வேறு வழிகளில் மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்தால்
தாமும் பிரதமரும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க பின்நிற்கப் போவதில்லை என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் இணைந்து வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இரண்டு ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில கட்சிகள் வேறாக இருந்தாலும் அனைவரும் இணைந்து செயற்பட நாம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதன் அடி;பபடையிலேயே நாம் செயற்பட வேண்டும் என்பதனை நினைவூட்வதாகத் தெரிவித்துள்ளார்.
“பௌத்தர்கள் என்ற வகையில், புத்தரைப் பேற்றி பேசும் போது, பௌத்தர் இரகசியமாகவேனும் பாவங்களை செய்யவில்லை, அரசியலவ்hதிகள் இரகசியமாகவேனும் லஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபடக்கூடாது.” என அவர் கோரியுள்ளார்.
அசரயிலவாதிகள் அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகள்செய்தால் அது மக்களின் முன்னிலையில் செல்லும், அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொண்டு கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரச நிறுவனங்களின் தலைவர்கள் பணிப்பாளர்கள் நியமனம் குறித்து விசேட குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் போன்று அமைச்சர்கள் தனியாக தீர்மானித்து நியமனங்களை மேற்கொள்ள முடியாது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் நல்லவாழ்த்துக்களையும் அசீர்வாதங்களையும் வழங்கி மக்களுக்கு சேவையாயற்ற திடசங்கட்பம்பூணுவோம் என கோரி விடைபெறுகின்றேன் நன்றிகள்” என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment