Saturday, September 05, 2015
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை
இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க
தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்காக ஒப்படைக்குமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால், அதன் அடிப்படையில் குமரன் பத்மநாதனை ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுடன் குமரன் பத்மநாதன் பேணி வந்த தொடர்பு, நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆதாரங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் சட்ட மா அதிபரினால், குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவருக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த சந்தேக நபர்களில் ஒருவராக குமரன் பத்மநாதன் திகழ்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உயிருடன் வாழும் ஒரே சந்தேக நபர் குமரன் பத்மநாதன் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய உயிருடன் வாழும் ஒரே சந்தேக நபர் குமரன் பத்மநாதன் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய பிரதான சந்தேக நபர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment