உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்களை வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்வதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பொருட்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிடுகின்றார்.
அந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னரே வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேக்கா நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதோடு, இறுதி அனுமதிக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அனுமதி கிடைத்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேக்கா மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment