Friday, September 25, 2015
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கை சம்பந்தமான அறிக்கை நிராகரிப்பதாக லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிக்கையை தயார் செய்த விதம் மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களை நிராகரிப்பதாக வித்தாரண வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நேர்மையான அனைத்து முயற்சிகளுக்கும் லங்கா சமசமாஜக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும். எனினும் எந்த வெளிநாட்டு தலையீடுகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது.
குற்றம் சுமத்தப்படும் போர் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்பதுடன் அதனை நாட்டில் உள்ள பொறிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.
ஏதேனும் வெளிநாட்டு உதவிகள் தேவைப்படுமாயின் அது இலங்கையின் விருப்பத்திற்கு அமைய அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஐ.நா மனித உரிமை ஆணையகம் வெளிநாட்டு தலையீடு நோக்கி தள்ள முயற்சித்துள்ளது.
இதனால், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையும் அறிக்கையை ஆணையாளரின் அலுவலகம் தயார் செய்த விதத்தையும் லங்கா சமசமாஜக் கட்சி நிராகரிப்பதாகவும் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment