Friday, September 25, 2015
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளி;ப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான உத்தேச தீர்மானத்தை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைக்க உள்ளன.
அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் அரசியல் சாசன திருத்தங்கள் செய்யப்படும் எனவும் இலங்கை வாக்குறுதி அளித்துள்ளது.
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் யோசனையும் அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது...
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நம்பிக்கை வாய்ந்த நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றைக்குறித்த முன்மொழிவுகள் அமெரிக்க யோசனையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சம அனுசரணை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை பாராட்டுக்குரியது.
அமைதியை நோக்கிய பயணத்தில் இலங்கை மக்கள் அண்மைக்காலத்தில் இரண்டு தடவைகள் பிரிவினைக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்மொழிவானது அனைத்து இலங்கையருக்கும் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் உறுதியான ஆதரவை வழங்கும்.
அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பான உறுதியான பதிலும் கிடைக்கப்பெறும்.
அத்துடன் தவறு செய்தவர்களுக்கு தண்டனையளிப்பதன் ஊடாக இலங்கை மக்களினதும், கீர்த்தி வாய்ந்த இராணுவத்தினரதும் நற்பெயர்கள் பாதுகாக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment