Wednesday, September 2, 2015

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி எதிர்பார்ப்பு எனக்கில்லை-மஹிந்த ராஜபக்ஷ

Wednesday, September 02, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்தார்.
 
எனக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவி குறித்த எதிர்பார்ப்பு கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான 
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரையைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  சிம்மாசன உரை ஆற்றியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர்,
எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியுள்ளார்.
 
இதேவேளை, நேற்று ஜனாதிபதியின் சிம்மாசன உரையைச் காண்பதற்கு நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் விசேட பார்வையாளர் அறைக்கு வருகை தந்திருந்திருந்தார்கள்.
 
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்து தனது உரையை முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment